கோம்பாக், நவம்பர் .5- நாட்டின் 15-வது பொது தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை தொடங்கியதை அடுத்து கோம்பாக் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் சுமுகமாக நடைபெற்று முடிந்தது.
இந்த தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் டத்தோஸ்ரீ அஸ்மின்
அலி, தேசிய முன்னணி சார்பில் டத்தோ மெகா ஜூல்கர்னாய்ன்
ஓமாருடின், பெஜூவாங் தானா ஆயர் கட்சி சார்பில் டத்தோ டாக்டர்
அஜிஸ் ஜமாலுடின் முகமது தாஹிர் மற்றும் சுயேச்சையான ஜூல்கிப்ளி
அகமது ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆர்.பார்த்திபன்








