ANTARABANGSA

 வேட்பு மனுத்தாக்கல் முடிவுக்கு வந்தது- தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது

5 நவம்பர் 2022, 3:19 AM
 வேட்பு மனுத்தாக்கல் முடிவுக்கு வந்தது- தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது

புத்ராஜெயா, நவ 5- நாட்டிலுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்கிய  பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 10.00 மணியளவில் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.

இந்த பொதுத் தேர்தல் 222 நாடாளுமன்றத் தொகுதிகள் 116 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் சபா மாநிலத்தின் புகாயா சட்ட மன்றத் தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் அதிகாரி அறிவித்தவுடன் பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும். 14 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த பிரசாரம் நவம்பர் 18ஆம் தேதி இரவு 11.59 வரையுடன் முடிவுக்கு வரும்.

இந்த பொதுத் தேர்தலில் 222 நாடாளுமன்றத் தொகுதிகளோடு பகாங், (59 தொகுதிகள்), பகாங் (42 தொகுதிகள்) மற்றும் பெர்லிஸ் (12 தொகுதிகள்) ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.