ACTIVITIES AND ADS

நாளை ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

4 நவம்பர் 2022, 10:18 AM
நாளை ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், நவ 4- அத்தியாவசிய உணவுப் பொருள்களை சந்தையை விட

மலிவான விலையில் விற்பனை செய்யும் ஜெலாஜா ஏசான் ராக்யாட்

திட்டம் நாளை மேலும் ஒன்பது இடங்களில் நடைபெறவுள்ளது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த

விற்பனை போர்ட் கிள்ளான், சுங்கை துவா, ஸ்ரீ செர்டாங், கின்ராரா,

உலுகிளாங், மோரிப், தஞ்சோங் சிப்பாட் மற்றும் மேரு ஆகிய

தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் இந்த

விற்பனையில் நடுத்தர கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு

தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும்

விற்கப்படும்.

இவை தவிர செலாயாங் மற்றும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00

வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும்

வாங்குவதற்குரிய வாய்ப்பு இந்த விற்பனைத் திட்டத்தில் கிட்டும்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் அவதியுறும் மக்களுக்கு உதவும்

நோக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அமல்பட்ட இந்த திட்டத்தின்

வாயிலாக இதுவரை 80,000 பேர் பயனடைந்துள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.