MEDIA STATEMENT

வாகன பழுதுபார்ப்பு பட்டறையில் மூன்று சொகுசு கார்கள் கொள்ளை

31 அக்டோபர் 2022, 4:43 AM
வாகன பழுதுபார்ப்பு பட்டறையில் மூன்று சொகுசு கார்கள் கொள்ளை

கோலாலம்பூர், அக் 31 - இங்குள்ள ஜாலான் டாமன்சாரா, கம்போங் புக்கிட் லஞ்சனில் உள்ள ஒரு பட்டறையில் இருந்து 940,000 ,வெள்ளி மதிப்பிலான நிசான் ஸ்கைலைன் ஜி.டி.ஆர். பிரெஸ்டீஜ் ரகக் கார் உள்பட மூன்று சொகுசு கார்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

பட்டறையின் முன் வளாகத்தின்  நுழைவாயிலில் உடைக்கப்பட்டது மற்றும் பல கார் சாவிகள் காணாமல போனது தொடர்பில் தாங்கள் நேற்று காலை 10.39 மணியளவில் புகாரைப் பெற்றதாக பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அமிஹிசாம் அப்துல் சுக்கோர் கூறினார்.

சந்தேக நபர்கள் பிரதான நுழைவாயிலில் உள்ள பூட்டை உடைத்து பட்டறைக்குள் நுழைந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.  வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான சில்வர் மெர்சிடிஸ் பென்ஸ்  இ200கே, வெள்ளை நிற டோயோட்டா லேண்ட் க்ருஸர்ஸ் மற்றும் நிசான் ஸ்கைலைன் ஜி.டி.ஆர். பிரிஸ்டேஜ் ஆகிய சொகுசு கார்கள் களவாடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

திருடப்பட்ட வாகனங்கள் அனைத்தும் பழுதுபார்க்கப்பட்டவையாகும். ஆனால் அவற்றின் உரிமையாளர்களால் உரிமை கோரப்படவில்லை. எத்தனை சந்தேக நபர்கள் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிய நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.