ACTIVITIES AND ADS

மாநில அரசின் உதவித் திட்ட அறிமுக நிகழ்வு அக்.22 மற்றும் 23ஆம் தேதிகளில் கிள்ளானில் நடைபெறும்

19 அக்டோபர் 2022, 10:08 AM
மாநில அரசின் உதவித் திட்ட அறிமுக நிகழ்வு அக்.22 மற்றும் 23ஆம் தேதிகளில் கிள்ளானில் நடைபெறும்

ஷா ஆலம், அக் 19- புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் இரண்டாம் கட்ட பயணத் தொடர் இம்மாதம் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் கிள்ளானில் நடைபெறும்.

அன்பான குடும்ப உருவாக்கம் எனும் கருப்பொருளில் இங்குள்ள சுல்தான் சுலைமான் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்வில் கலைஞர்களின் படைப்புகள், அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை கண்காட்சி போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

இவைத தவிர, அதிர்ஷ்டக் குலுக்கு மின் விளையாட்டுப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டி, மக்கள் விளையாட்டு, கயிறு இழுக்கும் போட்டி போன்ற அங்கங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாள் நிகழ்வை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார். இந்த நிகழ்வு அடுத்த மாதம் தொடக்கம் வரை இதர மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெறும்.

இதே போன்ற நிகழ்வு வரும் அக்டோபர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் சிப்பாங், கே.ஐ.பி. சென்ட்ரலிலும் நவம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் உலு சிலாங்கூர் பெர்சியாரான் அஸ் சலாமிலும் நடைபெறும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.