ANTARABANGSA

கின்ராரா தொகுதியில் 650 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டு- ஞாயிறு அன்று வழங்கப்படும்

11 அக்டோபர் 2022, 4:22 AM
கின்ராரா தொகுதியில் 650 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டு- ஞாயிறு அன்று வழங்கப்படும்

ஷா ஆலம், அக் 11- விரைவில் கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கின்ராரா தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

இ தொகுதியைச் சேர்ந்த 650 பேருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு கின்ராரா 5 ஜயண்ட் பேரங்காடியில் இந்த பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என்று கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம் மற்றும் எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் ஜோம் ஷோப்பிங் திட்ட பயனாளிகள் தவிர்த்து மற்றவர்களுக்கு இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது ஏற்படும் பொருளாதார சுமையை குறைப்பதில் இந்த உதவித் திட்டம் ஓரளவு துணை புரியும் என தாம் எதிர்பார்ப்பதாக ஊராட்சி புது  கிராம  மேம்பாட்டு  துறைக்கு ஆட்சிக் குழு உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.