சூப்பர் லீக் போட்டி- நெகிரியை 5-0 கோல் கணக்கில் வீழ்த்தி ஒன்பதாவது முறையாக வெற்றியாளர் ஆனது ஜோகூர் குழு

2 அக்டோபர் 2022, 4:58 AM
சூப்பர் லீக் போட்டி- நெகிரியை 5-0 கோல் கணக்கில் வீழ்த்தி ஒன்பதாவது முறையாக வெற்றியாளர் ஆனது ஜோகூர் குழு

கோலாலம்பூர், அக் 2- சூப்பர் லீக் போட்டியில் நெகிரி செம்பிலானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் வழி ஒன்பதாவது முறையாக தொடர்ச்சியாக சூப்பர் லீக் கிண்ண வெற்றியாளர்  என்ற பெருமையை ஜோகூர் டாருள் தாக்ஸிம் (ஜே.டி.டி.) குழு பெற்றுள்ளது.

இதன் வழி ஜோகூர் குழு சூப்பர் லீக் போட்டியின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை படைத்துள்ளதோடு பிற குழுக்களால் இனியும் தொட முடியாத சாதனையைப் புரிந்துள்ளது.

நேற்றிரவு  ஜோகூர் பாரு, சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பயற்றுநர் ஹேக்டர் பிடோகிலோ தலைமையிலான ஜோகூர் நெகிரி செம்பிலானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய வேளையில் கோல நெருஸ் மிஸான் ஜைனால் அபிடின் அரங்கில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சபா எப்.சி. குழு திரங்கானுவிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. 

இப்பருவம் முடிய இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் இந்த தொடரில் நடைபெற்ற 18 பங்கேற்றதன் வழி மொத்தம் 46 புள்ளிகளை ஜோகூர் குழு பெற்றுள்ளது. 36 புள்ளிகளைப் பெற்றுள்ள சபா குழு இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.