MEDIA STATEMENT

புக்கிட் ஜாலில் எல்.ஆர்.டி. நிலையம் வரும் சனியன்று பின்னிரவு 1.00 மணி வரை செயல்படும்

28 செப்டெம்பர் 2022, 10:42 AM
புக்கிட் ஜாலில் எல்.ஆர்.டி. நிலையம் வரும் சனியன்று பின்னிரவு 1.00 மணி வரை செயல்படும்

கோலாலம்பூர், செப் 28- தேசிய விளையாட்டுத் தொகுதியில் வரும் சனிக்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளையொட்டி பொது மக்களின் வசதிக்காக இலகு ரயில் தடத்தின் (எல்.ஆர்.டி.) புக்கிட் ஜாலில் நிலையம் பின்னிரவு 1.00 மணி வரை செயல்படும்.

பயணிகள் தங்கள் பயண இலக்கை அடைவதை உறுதி செய்வதற்காக எல்.ஆர்.டி.யின் அனைத்து இணைப்புத் தடங்களிலும் சேவை நேரம் நீட்டிக்கப்படும் என்று ரெப்பிட் கேஎல் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

சீரான பயணத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக டச் அண்ட் கோ அட்டையை பயன்படுதும்படி பயணிகளை அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.

பயணச் சேவை தொடர்பான மேல் விபரங்களை மைரெப்பிட்கேஎல் பேஸ்புக், டிவிட்டர் போன்ற  சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றும் அது தெரிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.