சிகிச்சைக்குப் பின்னர் நஜிப் சிறைக்கு திரும்பினார்

24 செப்டெம்பர் 2022, 4:53 AM
சிகிச்சைக்குப் பின்னர் நஜிப் சிறைக்கு திரும்பினார்

கோலாலம்பூர்,  செப் 24- செராஸ் மறுவாழ்வு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் சுகாதார கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று மீண்டும் காஜாங் சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

நஜிப் சிகிச்சையை முடித்துக் கொண்டு வெளியேறுவதற்கும் மறுபடியும் காஜாங் சிறைச்சாலைக்கு கொண்டுச் செல்வதற்கும் கோலாலம்பூர் மருத்துவமனை மற்றும் எச்.ஆர்.சி. மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் அனுமதி வழங்கியுள்ளதாக எச்.ஆர்.சி. வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான நஜிப்பின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் அவர் கடந்த திங்கள்கிழமை எச்.ஆர்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அது தெரிவித்தது.

எச்.ஆர்.சி மருத்துவமனையின் பிஸியோதெராபி நிபுணர்கள் சுயமாக பயிற்சிகளை செய்வதற்குரிய செய்முறைகளை நஜிப்பிற்கு செய்து காட்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.