MEDIA STATEMENT

சுக்மா 2022- சைக்கிளோட்டப் போட்டியில் சிலாங்கூருக்கு ஆறாவது தங்கம்

18 செப்டெம்பர் 2022, 2:02 PM
சுக்மா 2022- சைக்கிளோட்டப் போட்டியில் சிலாங்கூருக்கு ஆறாவது தங்கம்

ஷா ஆலம், செப் 18- தற்போது நடைபெற்று வரும்  இருபதாவது சுக்மா போட்டியில் சிலாங்கூர்  ஆறாவது தங்கப் பதக்கத்தை வென்றது.

நீலாய், பி.எம்.எக்ஸ்.அரேனா விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற சைக்கிளோட்டப் போட்டியில் சித்தி நத்தாஷா முகமது பஸ்ரி தங்கப் பதக்கத்தை வென்றார்.

சிலாங்கூர் விளையாட்டு மன்றம் இத்தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 16 முதல் 24 வரை நடைபெறும் இந்த சுக்மா போட்டியில் 40 தங்கம், 40 வெள்ளி மற்றும் 45 வெண்கலப் பதக்கங்களை வெல்ல சிலாங்கூர் இலக்கு கொண்டுள்ளது.

20வது சுக்மா போட்டியில் இடம் பெற்றுள்ள 30 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 490 விளையாட்டு வீரர்கள் மற்றும் 75 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.