ACTIVITIES AND ADS

அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனை நாளை ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும்

10 செப்டெம்பர் 2022, 3:52 PM
அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனை நாளை ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும்

ஷா ஆலம், செப் 10- மாநில அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை நாளை மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

பி.கே.பி.எஸ்.எனப்படும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் ஏற்பாட்டு செய்யப்பட்ட லோரி ஜெலாஜா ஏசான் ராக்யாட் என்ற இந்த மலிவு விற்பனைப் பயணத் தொடர் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் 

இந்த மலிவு விற்பனையில் ஒரு முழு கோழி 10.00 வெள்ளி விலையிலும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் அல்லது செலாயாங் மீன் ஒரு பேக் 6.00 வெள்ளிக்கும் விற்கப்படும்.

இந்த மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் வருமாறு-

  • தாமான் கோப்ராசி கியூபெக்ஸ் (உலு லங்காட்)
  • பிளாட் அம்பாங் ஹிலிர் (உலு லங்காட்)
  • டத்தாரான் தொங்காக் 9 (சபாக் பெர்ணம்)
  • சுங்கை பூலோ கார் நிறுத்தம் (கோல சிலாங்கூர்)
  • லெம்பா சுபாங் 1, பாசார் பாகி பகுதி (பெட்டாலிங் )
  • புளோக் ஜி, தாமான் மேடான் சஹாயா (பெட்டாலிங்)
  • டேவான் எம்.பி.பி.ஜே. ஜாலான் 171ஏ(பெட்டாலிங்)
  • பாசா பாகி விற்பனை மையம் தெலுக் புனோட் (கோல லங்காட்)

 

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.