பிங்காஸ் திட்டத்தின் கீழ் பத்து தீகா தொகுதியில் 670 பேருக்கு மாதம் வெ.300 உதவித் தொகை

21 ஆகஸ்ட் 2022, 12:22 PM
பிங்காஸ் திட்டத்தின் கீழ் பத்து தீகா தொகுதியில் 670 பேருக்கு மாதம் வெ.300 உதவித் தொகை

ஷா ஆலம், ஆக 21- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் பத்து தீகா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 670 பேருக்கு ஆண்டுக்கு 3,600 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

இந்த உதவித் தொகையை பெறுகின்ற அனைவரும் பள்ளிச் செல்லும் பிள்ளைகள் உள்பட அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இத்தொகுதியைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலோர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் தரப்பினராக உள்ளதால் மேலும் அதிகமானவர்களுக்கு இத்திட்டத்தை விரிவு படுத்த அரசிடம் தாங்கள் விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தவர்கள் பொறுமை காக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். இத்திட்ட பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

இங்குள்ள செக்சன் 24இல் இன்று நடைபெற்ற சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கிஸ் எனப்படும் சிலாங்கூர் விவேக அன்னையர் பரிவுத் திட்டம் மற்றும் கிஸ் ஐ.டி. எனப்படும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான திட்டத்திற்கு மாற்றாக இந்த பிங்காஸ் திட்டம் கடந்த  ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுமார் பத்து கோடியே 80 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் அமல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 30,000 பேர் வரை பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.