தேசிய கொடியை பறக்கவிடாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது- எம்.பி.எஸ்.ஏ. விளக்கம்

19 ஆகஸ்ட் 2022, 12:00 PM
தேசிய கொடியை பறக்கவிடாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது- எம்.பி.எஸ்.ஏ. விளக்கம்

ஷா ஆலம், ஆக 19- தேசிய தினத்தை முன்னிட்டு குடியிருப்புகள் அல்லது வணிக வளாகங்களில் தேசிய கொடியை பறக்க விடாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை ஷா ஆலம் மாநகர் மன்றம் கொண்டிருக்கவில்லை.

மாறாக, தேசிய கொடியை பறக்கவிடுவதன் அவசியத்தை உணர்த்தும் மற்றும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மாநகர் மேற்கொள்ளும் என்று ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஜமானி அகமது மன்சோர் கூறினார்.

இந்த காரணத்திற்காக நடவடிக்கை எடுப்பதற்கு எந்த சட்டமும் கிடையாது. எனினும், மாநகர் மன்ற அளவில் தேசிய கொடிகளை பறக்கவிடுவதற்கு நாங்கள் ஊக்குவிப்போம். நாடு சுதந்திரம் அடைந்து  65 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சுதந்திரத்தைப் போற்றுவதற்குரிய உணர்வை மக்கள் இயல்பாகவே கொண்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தேசிய தினத்தை முன்னிட்டு கொடிகளை பறக்கவிடவும் பழைய கொடிகளை மாற்றவும் கோரும் கடிதங்களை இதற்கு முன்னர் அனைத்து வளாகங்களுக்கும் தாங்கள் அனுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்குள்ள டத்தாரான் ஷா ஆலமில் நடைபெற்ற வாகனங்களில் தேசிய கொடியை பொருத்தும் இயக்கத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

ஈப்போ மாநகர் மன்றம் அமல்படுத்தியதைப் போல் கொடிகளைப் பறக்கவிடாத வளாகங்கள் மீது ஷா ஆலம் மாநகர் மன்றமும் நடவடிக்கை எடுக்குமா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு டத்தோ பண்டார் இவ்வாறு பதிலளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.