MEDIA STATEMENT

எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாட்டில் 64 வாகனங்களில் தேசிய கொடி பொருத்தப்பட்டது

19 ஆகஸ்ட் 2022, 7:35 AM
எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாட்டில் 64 வாகனங்களில் தேசிய கொடி பொருத்தப்பட்டது

ஷா ஆலம், ஆக 19- தேசிய தினத்தை வரவேற்கும் விதமாக ஷா ஆலம் மாநகர் மன்றம், அரசு துறைகள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான 64 வாகனங்களில் தேசியக் கொடி பொருத்தப்பட்டது.

மக்கள் மத்தியில் நாட்டுப் பற்றை வளர்க்கும் நோக்கிலான இந்த கொடி வழங்கும் நிகழ்வு டத்தாரான் ஷா ஆலமில் நடத்தப்பட்டதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஜமானி அகமது மன்சோர் கூறினார்.

ஷா ஆலம் மாநகர் மன்ற நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய கொடியை பறக்கவிடும் இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் எம்.பி.எஸ்.ஏ. சாலை போக்குவரத்து இலாகா, போலீஸ், தனியார் மருத்துவமனைகள், வங்கி மற்றும் கிராப் உணவு விநியோகிப்பாளர்களின் வாகனங்களுக்கு கொடிகள் பொருத்தப்பட்டன என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.