ANTARABANGSA

வங்காளதேசத் தொழிலாளர்களில் முதல் குழுவினர் மலேசிய வந்தடைந்தனர்

9 ஆகஸ்ட் 2022, 9:04 AM
வங்காளதேசத் தொழிலாளர்களில் முதல் குழுவினர் மலேசிய வந்தடைந்தனர்

புத்ராஜெயா, ஆக 9- முதல் கட்ட வங்காளதேசத் தொழிலாளர்கள் மலேசிய வந்தடைந்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.

வங்காளதேசத் தொழிலாளர்களைத் தருவிப்பது தொடர்பில் மலேசியாவுக்கும் வங்காளதேசத்திற்கும் இடையே கடந்தாண்டு டிசம்பர் 19ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த தொழிலாளர்கள் தருவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இத்தொழிலாளர்கள் உற்பத்தி துறைகளில் வேலைக்கு அமர்த்தப்படுவர் என்று இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

வங்காளதேச தொழிலாளர்களைத் தருவிக்கும் நடவடிக்கை இன்று தொடங்கி கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சுமார் ஆறாயிரம் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு 80 உள்நாட்டு முதலாளிகள் செய்து கொண்ட விண்ணப்பத்தை இங்குள்ள வங்காளதேச  தூதரகம் கடந்த வாரம் ஏற்று  கொண்டதாக அவர் சொன்னார்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.