MEDIA STATEMENT

டான்ஸ்ரீ காலிட் மறைவுக்கு மந்திரி புசார் அமிருடின் ஷாரி அனுதாபம்

1 ஆகஸ்ட் 2022, 2:03 AM
டான்ஸ்ரீ காலிட் மறைவுக்கு மந்திரி புசார் அமிருடின் ஷாரி அனுதாபம்

ஷா ஆலம், ஆக 1- சிலாங்கூர் முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ இப்ராஹிம் மறைவுக்கு மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அன்னாரின் மறைவு குறித்து அறிந்து ஆழ்ந்த துயரமும் கவலையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது முகநூல் பதிவில் அமிருடின் கூறினார்.

இருதய வால்வில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக கோலாலம்பூர் கார்டியாக் வாஸ்குலர் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டான்ஸ்ரீ காலிட், நேற்றிரவு 11.08 மணியளவில் உயிர்நீத்தார்.

அன்னாருக்கு மனைவியும் நான்கு பிள்ளைகளும் மற்றும் இரண்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.

அவரது நல்லுடல் புக்கிட் டமன்சாராவில் உள்ள சைடினா உமர் அல் கத்தாப் மசூதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பொது மக்களின் அஞ்சலிக்காக   ஆலம் பள்ளிவாசலுக்கு கொண்டு வரப்படும்.

மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்க்ஹாஜ் அவர்களின் ஒப்புதலுடன் டான்ஸ்ரீ காலிட்டின் நல்லுடல் செக்சன் 5இல் உள்ள  ஷா ஆலம் அரச மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.