MEDIA STATEMENT

ஒற்றுமையை வலுப்படுத்துவோம், பொதுத் தேர்தலுக்குத் தயாராவோம்- கேஅடிலான் உறுப்பினர்களுக்கு அமிருடின் கோரிக்கை

29 மே 2022, 11:05 AM
ஒற்றுமையை வலுப்படுத்துவோம், பொதுத் தேர்தலுக்குத் தயாராவோம்- கேஅடிலான் உறுப்பினர்களுக்கு அமிருடின் கோரிக்கை

ஷா ஆலம், மே 29- கெஅடிலான் தேர்தல் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும்படி கேம்பாக் தொகுதியிலுள்ள அனைத்து உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

கெஅடிலான் கட்சியின் வலுவான கோட்டையாக விளங்கும் சிலாங்கூரை விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மீண்டும் தக்கவைத்துக் கொள்வதற்கு ஏதுவாக அனைத்து சக்தியையும் ஒன்றிணைக்க உறுப்பினர்களின் ஒற்றுமை முக்கியமானதாக விளங்குவதாக மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் தலைவருமான அவர் தெரிவித்தார்.

கோம்பாக் தொகுதியிலுள்ள அனைத்து கெஅடிலான் உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  எனக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மற்றும் நம்பிக்கைக்கேற்ப கோம்பாக் தொகுதியில் முழு அர்ப்பணிப்புடன் எனது பணியை மேற்கொள்வேன் என அவர் சொன்னார்.

கட்சித் தேர்தலில் கோம்பாக் தொகுதி முடிவுகள் வெளியானவுடன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கோம்பாக் தொகுதியில் தம்மை எதிர்த்து ஆரோக்கியமான முறையில் போட்டியிட்ட ஃபார்ஷா வாஃபா சல்வடோருக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.