ECONOMY

இந்த ஞாயிற்றுக்கிழமை தற்காப்புக் கலைப் போட்டி ஏற்பாடு

25 மே 2022, 7:11 AM
இந்த ஞாயிற்றுக்கிழமை தற்காப்புக் கலைப் போட்டி ஏற்பாடு
இந்த ஞாயிற்றுக்கிழமை தற்காப்புக் கலைப் போட்டி ஏற்பாடு

ஷா ஆலம், 25 மே: இளம் தலைமுறை, விளையாட்டு மற்றும் மனித மூலதனக் ஆட்சிக்குழு சிலாங்கூர் தற்காப்புக் கலை XTIV போட்டியை இந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கத்தில் நடத்துகிறது.

சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில் (MSNS) மற்றும் ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (MBSA) இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் சீலாட் தற்காப்புக் கலைகள் மற்றும் செம்பா நடனம், தேக் வான் டோ மற்றும் சிலம்பம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

காலை 7.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் தற்காப்பு கலைகள், ஏரோபிக்ஸ் மற்றும் தெரு இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு விருந்தளிக்கப்படும்.

கூடுதலாக, பார்வையாளர்களை கவர அன்றைய தினம் ஒரு அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ எண் 012-7323709 அல்லது 011-20994843 (சீலாட்), 012-2469671 (தேக் வான் டோ) மற்றும் 014-5009000 (சிலம்பம்) ஆகியவற்றை அழைக்கலாம்.

வகைevent

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.