ANTARABANGSA

சீனாவில் திட்டமிடப்பட்டிருந்த 2022ம் ஆண்டு  ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன 

6 மே 2022, 8:18 AM
சீனாவில் திட்டமிடப்பட்டிருந்த 2022ம் ஆண்டு  ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன 

சியோல், மே 6 - சீன நகரமான ஹாங்சோவில் செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 25 வரை நடைபெற இருந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகத்தை மேற்கோள்காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலை மேற்கோள் காட்டி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டி குறிப்பிடப் படாத தேதிக்கு மாற்றப்படும் என்று சீனா மத்திய தொலைக்காட்சி நிறுவனம் கூறியது.

ஒத்திவைப்புக்கு எந்த காரணமும் வழங்கப் படவில்லை, ஆனால் சமீபத்திய வாரங்களில் கோவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்புடன் சீனா போராடி வருகிறது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.