ஷா ஆலம், ஏப்ரல் 29: கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் இந்த ஆண்டு ரமலான் பண்டிகையின் போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மொத்தம் RM56,000 செலவிடப்பட்டது.
அதன் சட்டமன்ற உறுப்பினர் வீ கணபதிராவ், தொகுதியில் உள்ள 33 சூராவ்கள் மற்றும் ஏழு மசூதிகளுக்கு உள்ளூர் சமூகத்துடன் நோன்பு திறக்கும் நிகழ்வுகளுக்கு இந்த நிதி அனுப்பப்பட்டது என்றார்.
“அதுமட்டுமல்லாமல், சூராவுடன் லம்புக் கஞ்சியைக் குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்க ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம்.
நேற்று, அந்த ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி புத்ரா ஹைட்ஸில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியையும் நடத்தினோம்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
ரமலானின் தொடக்கத்திலிருந்து 380 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு (பி40) அடிப்படை உணவு உதவிகளும் கவுன்சிலர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
“அடிப்படைத் தேவைகளின் விநியோகம் பண்டிகைக் காலத்திற்கு மட்டுமல்ல, நாடு கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட காலத்திலிருந்து செயல் படுத்தப் படுகிறது.
"அந்த நேரத்தில் பல குடும்பங்கள் கஷ்டங்களை அனுபவித்து வந்ததை நாங்கள் அறிவோம், கடந்த ஆண்டு டிசம்பரில் சிலாங்கூர் அசாதாரண வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது மற்றும் கோத்தா கெமுனிங் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும்" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 ரிங்கிட் ஹரி ராயா பெருநாள் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் தெரிவித்தார்.



