MEDIA STATEMENT

சிப்பாங்-சாலாக் சாலையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம்

15 ஏப்ரல் 2022, 10:48 AM
சிப்பாங்-சாலாக் சாலையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம்

சிப்பாங், ஏப்ரல் 15: இன்று காலை ஜாலான் சிப்பாங் -சாலாக் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம், வயிற்றில் காயங்கள் மற்றும் கைகள் கேபிள் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சிப்பாங் காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட ஒரு நபரிடமிருந்து காலை 8.32 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்த புகாரைப் பெற்றதாக சிப்பாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் கூறினார்.

கறுப்பு கால்சட்டை , கன்னத்தின் கீழ் முகக்கவரி மற்றும் வெள்ளை  காலர் டி-சர்ட் அணிந்திருந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது, அவரது வயது 20 முதல் 30 வரை இருக்கலாம். மேலும் ,BCG (Bacillus Calmette Guerin) தடுப்பூசியின் எந்த தடயமும் இல்லை என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடம் எண்ணெய் பனை தோட்டங்களால் சூழப்பட்ட பகுதி என்றும், சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியைச் சுற்றி ஆய்வு செய்ததில் ஒரு அரிவாள், மூன்று சிகரெட் துண்டுகள், முடி கட்டிகள் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் இரத்தத்தின் தடயங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

வான் கமருல் அஸ்ரான், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களை இழந்தவர்கள் விசாரணைக்கு உதவ அறிக்கை அளிக்க முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.