ANTARABANGSA

160,000 க்கும் மேற்பட்ட சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுள்ளனர்

12 ஏப்ரல் 2022, 9:59 AM
160,000 க்கும் மேற்பட்ட சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், ஏப்ரல் 12: சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 164,375 சிறார்கள் அல்லது 4.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 13 லட்சத்து 68 ஆயிரத்து 326 சிறார்கள் அல்லது 38.5 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 28 லட்சத்து 62 ஆயிரத்து 105 பேர் அல்லது 92 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 63 ஆயிரத்து 947 பேர் அல்லது 95.3 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அதே வேளையில், மொத்தம் 1 கோடியே 59 லட்சத்து 33 ஆயிரத்து 49 பேர் அல்லது 67.7 விழுக்காடு பெரியவர்கள்  பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ள நேரத்தில் 2 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 974 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக பெற்றுள்ளனர். பெரியவர்களில் 98.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதாவது  2 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரத்து 33 பேர் என்கிறது.

4,460 முதல் டோஸ்கள், 32,183 இரண்டாவது டோஸ்கள், 10,180 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 46,823 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்) கீழ் கொடுக்கப்பட்ட மொத்த டோஸ்கள் எண்ணிக்கை 6 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, நேற்று மலேசியாவில் கோவிட் -19 காரணமாக 19 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.