ACTIVITIES AND ADS

கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் சதுரங்கப் போட்டி- வெ.6,000 வெல்ல வாய்ப்பு

18 மார்ச் 2022, 6:14 AM
கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் சதுரங்கப் போட்டி- வெ.6,000 வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், மார்ச் 18- கோத்தா அங்கிரிக் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் சதுரங்கப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு 6,000 வெள்ளி வரையிலான பரிசுகளை வெல்வதற்குரிய வாய்ப்பு உள்ளது.

இப்போட்டி ஷா ஆலம் செக்சன் 13 இல் உள்ள தொகுதி சேவை மையத்தில் நாளையும் ஞாயிற்றுக் கிழமையும் இந்தப் போட்டி நடைபெறும் என்று தொகுதி உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இந்த போட்டியில் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் பங்கேற்க அழைக்கிறோம். சுமார் 350 பேர் வரை இப்போட்டியில் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம் என சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.

இப்போட்டியின் முதல் நாளன்று காலிட் சமாட் கிண்ண சதுரங்கப் போட்டி நடைபெறும் எனக் கூறிய அவர், அப்போட்டியில் முதல் பரிசாக 500 வெள்ளி இரண்டாம் பரிசாக 250 வெள்ளி மூன்றாம் பரிசாக 130 வெள்ளி நான்காம் பரிசாக 100 வெள்ளி ஐந்தாம் பரிசாக 70 வெள்ளி வழங்கப்படும் வேளையில் ஆறு முதல் பத்தாவது வரையிலான இடங்களைப் பெறுவோருக்கு தலா 50 வெள்ளி வழங்கப்படும் என்றார்.

இதனிடையே நஜ்வான் ஹலிமி கிண்ண பொது சதுரங்கப் போட்டியின் முதல் நிலை வெற்றியாளருக்கு 1,000 வெள்ளியும் இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு 500 வெள்ளியும் வழங்கப்படும் வேளையில் மூன்றாம் இடத்திற்கு 250 வெள்ளியும் நான்காம் இடத்திற்கு 130 வெள்ளியும் ஐந்தாம் இடத்திற்கு 100 வெள்ளியும் ஆறு முதல் பத்தாவது இடத்தைப் பெறுவோருக்கு தலா 60 வெள்ளியும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

பன்னிரண்டு  வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்கான போட்டியில் முதல் பரிசாக 400 வெள்ளியும் இரண்டாம் பரிசாக 200 வெள்ளியும் மூன்றாம் பரிசாக 100 வெள்ளியும் நான்காம் பரிசாக 80 வெள்ளியும் ஐந்தாம் பரிசாக 60 வெள்ளியும் அடுத்த நான்கு இடங்களைப் பெறுவோருக்கு தலா 50 வெள்ளியும் வழங்கப்படும்.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஓமார் (017-9797244) அல்லது ஷவால் (017-2757276) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.