MEDIA STATEMENT

தீவிபத்தில் மாற்றுத் திறனாளி பலி- கோம்பாக்கில் சம்பவம்

16 பிப்ரவரி 2022, 2:54 AM
தீவிபத்தில் மாற்றுத் திறனாளி பலி- கோம்பாக்கில் சம்பவம்

கோலாலம்பூர், பிப், 16- வீட்டின் படுக்கையறையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் கோம்பாக், கம்போங் சங்காட் டாமாயில் நேற்று காலை 10.00 மணியளவில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் நிகழ்ந்த போது முகமது பைருஸ் முகமது அன்போர் (வயது 44) என்ற அந்த மாற்றுத் திறனாளி தன் தாயார் மற்றும் இரு சகோதரர்களுடன் வீட்டில் இருந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.

இத்தீச் சம்பவம் தொடர்பில் அந்த மாற்றுத் திறனாளியின் சகோதரர் மூலம் தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் சொன்னார்.

தீக்கான காரணத்தை தீயணைப்புத் துறையினர் ஆராய்ந்து வருவதாக பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.

இறந்தவரின் உடல் சவப் பரிசோதனைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.