ஷா ஆலம், பிப் 2- இங்குள்ள மான் புடாயா இசை நீருற்று நேற்று தொடங்கி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. செக்சன் 14 இல் அமைந்துள்ள இந்த பொழுது போக்கு மையம் இம்மாதம் 11 ஆம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றம் கூறியது. வழக்கமாக இந்த இசை நீரூற்று வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் என்று அது தெரிவித்தது. சுற்றுலா ஈர்ப்பு மையமான இந்த இசை நீரூற்று கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த மையத்தின் செயல்பாடுகளும் கடந்தாண்டு ஜூன் மாதம் நிறுத்தப்பட்டன.
MEDIA STATEMENT
ஷா ஆலம், லாமான் புடாயா இசை நீருற்று தற்காலிக நிறுத்தம்
2 பிப்ரவரி 2022, 2:26 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
சிலாங்கூரில் 12 ஊராட்சி மன்றங்களின் சேவைகளை ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் செயலி’
Adam Azman
10 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூர் ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 விழுக்காடு தள்ளுபடி: 21,234 வணிகர்கள் பயன்பெறுவர்
Shalini Rajamogun
18 ஜூலை 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



