ANTARABANGSA

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு வெ. 27,000 உதவி நிதி- எம்.பி.ஐ. வழங்கியது

12 ஜனவரி 2022, 9:30 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு வெ. 27,000 உதவி நிதி- எம்.பி.ஐ. வழங்கியது

ஷா ஆலம், ஜன 12- கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தனது 9 ஊழியர்களுக்கு எம்.பி.ஐ.எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் 27,000 வெள்ளியை உதவி நிதியாக வழங்கியது.

வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பினால் உண்டான நிதிச்சுமையை குறைக்கம் நோக்கில் அவர்களுக்கு தலா 3,000 வெள்ளி வழங்கப்பட்டதாக எம்.பி.ஐ. தலைமை நிர்வாக அதிகாரி நோரித்தா முகமது சீடேக் கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை பொருள்கள் வழங்கப்பட்டன. இது தவிர எம்.பி.ஐ. க்கு சொந்தமான புக்கிட் பெருந்தோங் கோல்ப்  ரிசோர்ட் சென். பெர்ஹாட் நிறுவனம் அவர்களுக்கு மெத்தை, போர்வை தலையணை போன்ற பொருள்களை வழங்கியது என்றார் அவர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு தமது தரப்பு தன்னார்வலர் குழுவை ஏற்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்.பி.ஐ. பணியாளர்களுக்கு உதவி நிதியை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சக பணியாளர்களுக்கு உதவி வழங்குவதில் குழுவாகச் செயல்பட்ட எம்.பி.ஐ. ஊழியர்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.