ஆலம் ஷா , ஜன 6- டெங்கிலில் உள்ள ஈயக் கப்பலை மாநிலத்தின் வரலாற்று அருங்காட்சியகமாக மாற்ற சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.6,000 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட அந்த கப்பலின் விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் இதன் மூலம் பொதுமக்களுக்கு புதிய சுற்றுலா மையத்தை உருவாக்கும் திட்டத்தை நனவாக்க முடியும் என்றும் கலாசாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.
உலகின் மிகப் பெரிய ஈயக் கப்பல்களில் ஓன்றான இது, இன்னும் செயல்படும் நிலையில் உள்ளது. ஈயலம்பத்தின் நடுவில் அமைந்துள்ள இந்த கப்பலை தேசிய ஈயச் சுரங்க அருங்காட்சியகமாக மாற்ற விரும்புகிறோம். அதோடு மட்டுமின்றி வரலாற்றுப்பூர்வபொழுது போக்கு மையமாகவும் இது விளங்கும் என்றார் அவர்.
சிப்பாங் நகராண்மைக் கழகத்துடன் இணைந்து இத்திட்டம் அமல் படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சிலாங்கூரில் கலாசார உருவாக்கம் எனும் தலைப்பிலான விவாத நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சி யூ டியூப் சிலாங்கூர் டிவி மற்றும் மீடியா சிலாங்கூர் முகநூல் வாயிலாக நேற்று ஒளிபரப்பப்பட்டது.
ECONOMY
டெங்கிலில் உள்ள ஈயக் கப்பலை அருங்காட்சியகமாக மாற்ற சிலாங்கூர் அரசு திட்டம்
6 ஜனவரி 2022, 10:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



