கோலாலம்பூர், டிச 26 - நாட்டில் கோவிட் -19 சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. நேற்று முன்தினம் 3,528 ஆக இருந்த நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 3,160 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.தொடர்ந்து ஆறாவது நாளாக நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் தினசரி எண்ணிக்கை நான்காயித்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 38 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பதிவான சம்பவங்களில் 3,004 உள்ளூர் பரவிய வேளையில் எஞ்சிய 156 சம்பவங்கள் வெளிநாட்டனர் சம்பந்தப்பட்டவையாகும்.
மொத்தம் 3,094 சம்பவங்கள் அல்லது 97.9 விழுக்காடு ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் 66 சம்பவங்கள் அல்லது 2.1 விழுக்காடு மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளன.
நேற்று 4,421 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 வட்சத்து 61 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது.
ECONOMY
குறைந்து வருகிறது கோவிட்19: நேற்று 3,160 பேர் பாதிப்பு
26 டிசம்பர் 2021, 7:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

selangor
பொருளாதார நெருக்கடி: சிலாங்கூரில் 40 விழுக்காடு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




