MEDIA STATEMENT

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் YB  வீ.கண்பதிராவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

25 டிசம்பர் 2021, 2:36 AM
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் YB  வீ.கண்பதிராவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

ஷா ஆலம் டிச 25 ;-  இன்று டிசம்பர் 25 இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

இயேசு கிறிஸ்து, உலகில் உள்ள மக்களின் பாவத்தை ஏற்றுக், இரட்சிக்கப் பிறந்தவர். மன்னிப்பை மக்களுக்கு அருளிய மகா கடவுள் பிறந்த தினம், மக்களின் துன்பம் மறைந்து, மகிழ்ச்சி நிறைந்த தினம் தான் கிறிஸ்து பிறந்த தினம்.

கிறிஸ்துமஸ் என்பதன் முழு அர்த்தமே அன்புதான். அன்பு ஒன்றுதான் இவ்வுலகில் என்றும் மாறாமல் நிலைத்து நீடித்து கொண்டிருக்கிறது. மனிதர்கள் மட்டுமல்லாது உயிரினங்களிலும் செடி கொடிகளிலும் அன்பை செலுத்தி கொண்டிருக்கிறோம்.

இயேசு போதித்த அன்பு, தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய நெறிகளை மக்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் வாழ்ந்தால், உலகம் அமைதிப் பூங்காவாக பூத்துக் குலுங்கும்.

 இந்த நன்னாளில் அனைவரும் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை வளர்ந்தோங்க செய்து அதன்மூலம் மனிதகுலம் யாவற்றுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முன்வர வேண்டும்.  நம் ஒவ்வொருவர் வாழ்விலும் சந்தோஷம், சமாதானம், செழிப்பு, நல்வாழ்வு ஆகியவற்றை தழைத்தோங்கச் செய்திட வேண்டிக் கொள்கிறேன்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.