ECONOMY

இன்று தமிழ்ப்பள்ளிகளுக்கான 2021ம் ஆண்டு, சிலாங்கூர் மாநில அரசின் ரிங்கிட் 49 லட்சத்தை மந்திரி புசார் வழங்கினார்

11 டிசம்பர் 2021, 10:47 AM
இன்று தமிழ்ப்பள்ளிகளுக்கான 2021ம் ஆண்டு, சிலாங்கூர்  மாநில அரசின் ரிங்கிட் 49 லட்சத்தை மந்திரி புசார் வழங்கினார்

கோம்பாக், பத்துமலை, டிசம்பர் 11 – சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள 637 பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு உதவிக்காக மொத்தம் RM23.2 மில்லியன் ஒதுக்கியுள்ளது.

இந்த ஒதுக்கீடுகளில் 96 ஆரம்ப தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியத்தை, இன்று சனிக்கிழமை மாலை 3,00 மணிக்கு  பத்துமலை தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம்  ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறப்பு நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எடுத்து வழங்கினார்.

இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிங்கிட் 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் இன்று ரிங்கிட்  49 லட்சம் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலம் பரிமாறப்பட்டது.

இருப்பினும்  அழைக்கப்பட்ட சுமார் 50 பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வருகைத்தந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.

சிலாங்கூரின் எல்லா மாவட்டத்திலிருந்தும் ஒரு பள்ளி வீதம் மேடைக்கு அழைக்கப்பட்டு  அடையாள காசோலை வழங்கப்பட்டது

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.