ECONOMY

ஷா ஆலம் வட்டாரத்தில் நேற்று 1,453 காக்கைகள் சுடப்பட்டன

29 நவம்பர் 2021, 9:50 AM
ஷா ஆலம் வட்டாரத்தில் நேற்று 1,453 காக்கைகள் சுடப்பட்டன

ஷா ஆலம், நவ 29- ஷா ஆலம் வட்டாரத்தில் காக்கைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 1,453 காக்கைகள் சுடப்பட்டன.

அதிகாலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த காக்கை சுடும் நடவடிக்கையில் 10 பேர் பங்கேற்றதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின்  வர்த்தக மற்றும் பொது உறவு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

காக்கைகளால் இரைச்சல் மற்றும் பொது இடங்களில் அசுத்தம் ஏற்படுவது தொடர்பில் பொது மக்களிடமிருந்து தாங்கள் புகார்களைப் பெற்று வந்ததாக அவர் சொன்னார்.

இதன் அடிப்படையில் ஷா ஆலம் வட்டாரத்தில் காக்கைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்த பறவைகளைச் சுடும் இயக்கம் நேற்று மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

 

 

 

 

 

 

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.