MEDIA STATEMENT

குடி போதையில் செலுத்தப்பட்ட கார் தளவாடப் பொருள் கடையில் நுழைந்தது

22 நவம்பர் 2021, 2:34 AM
குடி போதையில் செலுத்தப்பட்ட கார் தளவாடப் பொருள் கடையில் நுழைந்தது

ஷா ஆலம், நவ 21- குடிபோதையில் செலுத்தப்பட்டதாக கருதப்படும் கார் கட்டுப் பாட்டை மீறி தளவாடப் பொருள் விற்பனை கடையில் நுழைந்ததில் அக்கடையின் தொழிலாளி ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளானார்.

இச்சம்பவம் அம்பாங், ஜாலான் கம்போங் பாசீரில் நேற்று மாலை  6.00 மணியவில்

நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறினார்.

இந்தச் மோதல் சம்பவத்தில் அந்த கடையின் கட்டமைப்பும் சேதமடைந்ததோடு 20 வயது பணியாளரும் காயமுற்றதாக அவர் தெரிவித்தார்.

36 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற புரோட்டான் ப்ரீவ் கார் கடையின் மீது மோதியது தொடர்பில் மாலை 6.15 மணியவில் தங்களுக்கு புகார் கிடைத்ததாக அவர் சொன்னார்.

இந்த விபத்தில லேசான காயங்களுக்கு உள்ளான காரின் ஓட்டுநர் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.