MEDIA STATEMENT

மலாக்கா தேர்தல்- பக்கத்தான் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தது

29 அக்டோபர் 2021, 10:34 AM
மலாக்கா தேர்தல்- பக்கத்தான் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தது

ஷா  ஆலம், அக் 29- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகள் உடன்பாடு கண்டுள்ளன.

இந்த தேர்தலில் ஹராப்பான் சின்னத்தை அனைத்துக் கட்சிகளும் பயன்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பக்கத்தான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பக்கத்தான் தலைவர் மன்றக் கூட்டத்தில் இவ்விவகாரங்கள் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் ஜசெக 8 தொகுதிகளிலும் அமானா கட்சி 9 தொகுதிகளிலும் கெஅடிலான் கட்சி 11 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அவர் சொன்னார்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி தேர்தலில் களம் காணும் அனைத்துக் கட்சிகளும் ஹராப்பான் சின்னத்தைப் பயன்படுத்தும் என்று இன்று பி.கே.ஆர். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அமானா கட்சித் தலைவர் முகமது சாபு மற்றும்  ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரும் இந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.