MEDIA STATEMENT

சிலாங்கூரில் அக்.29 வரை இடியுடன் கூடிய அடை மழை- வானிலை ஆய்வுத் துறை கணிப்பு

23 அக்டோபர் 2021, 8:43 AM
சிலாங்கூரில் அக்.29 வரை இடியுடன் கூடிய அடை மழை- வானிலை ஆய்வுத் துறை கணிப்பு

ஷா ஆலம், அக் 23- இன்று தொடங்கி வரு 29 ஆம் தேதி வரை சிலாங்கூரில் இடியுடன் கூடிய அடை மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

சிலாங்கூர் தவிர்த்து, கெடா, பேராக், கிளந்தான், பகாங், சரவா, சபா, லபுவான் ஆகிய மாநிலங்களிலும் இதே நிலை நீடிக்கும் என்று அத்துறையின் தலைமை இயக்குநர் முகமது ஹெல்மி அப்துல்லா கூறினார்.

மற்ற மாநிலங்களில் மழை இருக்காது அல்லது வானம் மேகமூட்டமாக க் காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளதாக பெரித்தா ஹரியான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் மாலை முதல் இரவு வரை வானிலை மந்தமாக காணப்படும் என்பதோடு இந்நிலை வரும் 25 ஆம் தேதிக்குப் பிறகு குறையத் தொடங்கும் என்று அவர் சொன்னார்.

சபா மற்றும் சரவா மாநிலங்களில் வரும் 29 ஆம் தேதி வரை வானிலை மந்தமாக காணப்படும். லவுவானில் பல இடங்களில் மழை செய்யும் என அவர் கூறினார். 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.