MEDIA STATEMENT

தடுப்பூசியை பெறாதவர்கள் மாவட்ட சுகாதார இலாகாவை தொடர்பு கொள்ள மந்திரி புசார் கோரிக்கை

14 அக்டோபர் 2021, 3:39 AM
தடுப்பூசியை பெறாதவர்கள் மாவட்ட சுகாதார இலாகாவை தொடர்பு கொள்ள மந்திரி புசார் கோரிக்கை

ஷா ஆலம், அக் 14- கோவிட்-19 தடுப்பூசியை இன்னும் பெறாத பெரியவர்கள்  வருகைக்கான முன்பதிவைப் பெற மாவட்ட சுகாதார இலாகாவின் தடுப்பூசி நடவடிக்கை அறையைத் தொடர்பு கொள்ளுமாறு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவிட்-19 தடுப்பூசியின் முதலாவது டோஸ் அல்லது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் பட்டியலிடப்பட்டுள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

தடுப்பூசியை விரைந்து பெறுவதற்கு ஏதுவாக தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள நடவடிக்கை அறைகளை தொடர்பு கொண்டு வருகைக்கான முன்பதிவை  செய்ய வேண்டும் என்றார் அவர்.

பெட்டாலிங், கோல லங்காட், கோம்பாக், கோல சிலாங்கூர், கிள்ளான், உலு சிலாங்கூர், உலு லங்காட், சிப்பாங், சபாக் பெர்ணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி நடவடிக்கை அறைகள் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிலாங்கூரில் நோய்த தடுப்பாற்றல் கொண்ட குழுமத்தை உருவாக்கும்  முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.