ஷா ஆலம், அக்டோபர் 8: கடந்த புதன்கிழமை (அக்டோபர் 6) கோலா சிலாங்கூருக்கு தென்மேற்கே 13.6 கடல் மைல் தொலைவில் ஏற்பட்ட அலைகளால் படகு கவிழ்ந்ததால், இந்தோனேசியர் ஒருவர் கடலில் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.
மலேசிய கடல் கண்காணிப்பு பிரிவின் சிலாங்கூர், அமலாக்க முகாமின் (ஏபிஎம்எம்) இயக்குனர் கேப்டன் முகமட் ரோஸ்லி காசிம், நேற்று நடந்த சம்பவத்தின் அறிக்கையைப் பெற்றப்பின் தனது தரப்பு, 21 வயது சூத்ரி எனப்படும் பாதிக்கப் பட்டவரை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியதாகக் கூறினார்.
"சம்பவத்தில் படகு தலைகீழாக கவிழ்வதற்கு முன், கடும் அலைகளால் தூக்கி வீசப் பட்டது . அப்போது சூத்திரியுடன், டெகாங் மற்றும் மற்றொருவரும் கடலில் விழுந்தனர் இன்று ஒரு அறிக்கையில் ஜோகூர் பாரு கடல் போலீஸ் மீட்பு துணை மையம் (எம்ஆர்எஸ்சி) கூறுகிறது.
ஒருங்கிணைந்த தேடலில் இரண்டாவது நாளுக்கான இன்று, நடவடிக்கை காலை 7 மணிக்கு கடல் போலீஸ்படை (பிபிஎம்) மற்றும் ராயல் மலேசிய கடற்படையின் உதவியுடன் கடல் காவலர் 26 படகுகள் மற்றும் கடல் படை விமானமும் இந்த தேடுதலில் ஈடுப்பட்டுள்ளதாக முகமது ரோஸ்லி கூறினார்.
(டிஎல்டிஎம்). "இன்றைய நடவடிக்கை 143.4 சதுர கடல் மைல் பரப்பளவை கொண்டுள்ளதாகவும், இன்று கோலா சிலாங்கூர் நீரில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த இடத்தில் வானிலை வெயிலாக இருக்கிறது, காற்றின் வேகம் மணிக்கு 10 முதல் 20 கிலோமீட்டர் வரை இருக்கும், ”என்று அவர் கூறினார்.
மலேசிய மீன்வள மேம்பாட்டு ஆணையம் (எல்.கே.ஐ.எம்.) கோலா சிலாங்கூர் ஜெட்டியில் தனது தரப்பை உஷார் படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். மலேசிய கடல் கண்காணிப்பு ஆணையம் சிலாங்கூர் மாநில கடல் கண்காணிப்பு செயல்பாடு மையம் 03-31760627 மற்றும் 24 மணிநேரமும் செயல்படும் மெர்ஸ் 999 மூலம் ஏதும் தடயங்கள் கிடைத்தால் தொடர்க் கொண்டு தகவல்களைப் பகிருமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.



