தாமான் டெம்ப்ளர் தொகுதியில் 1,000  இலவச  சுயபரிசோதனை கருவிகள் விநியோகம்

24 செப்டெம்பர் 2021, 5:06 AM
தாமான் டெம்ப்ளர் தொகுதியில் 1,000  இலவச  சுயபரிசோதனை கருவிகள் விநியோகம்

செலாயாங், செப் 24- தாமான் டெம்ப்ளர் தொகுதி மக்களுக்கு உமிழ்நீர் வழி கோவிட்-19 நோய்த் தொற்றை கண்டறியும் 1,000 சுயப் பரிசோதனை கருவிகள் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன.

இந்த கருவிகளை பொது மக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 தொடங்கி மாலை 5.00 வரை தொகுதி சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சானி ஹம்சான் கூறினார்.

வீட்டில் உள்ளவர்கள் மற்றும் நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த சுயப் பரிசோதனை கருவிகள் விநியோகிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

இது தவிர, வைட்டமின் மாத்திரைகள், இருமல் மருந்து ஆகியவையும் அந்த சுயப் பரிசோதனை கருவியுடன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.