MEDIA STATEMENT

நாட்டில் 77.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

18 செப்டெம்பர் 2021, 4:32 AM
நாட்டில் 77.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், செப் 18- நாட்டில்  நேற்று வரை  1 கோடியே 81 லட்சத்து 35 ஆயிரத்து 561 பேர் அல்லது 77.5 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 18 லட்சத்து 61 ஆயிரத்து 904 பேர் அல்லது 92.9 விழுக்காட்டினர் முதல் டோஸ் தடுபபூசியைப் பெற்றுள்ளதாக தேசிய கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழு தனது டிவிட்டர் பதவில் தெரிவித்தது.

நாடு முழுவதும் நேற்று 238,022 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவற்றில் 162,016 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 75,986 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 3 கோடியே 99 லட்சத்து 23 ஆயிரத்து 416 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.