MEDIA STATEMENT

சாலை விபத்தில் இறந்தவர் வீட்டுக்கு கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் வருகை

13 செப்டெம்பர் 2021, 3:31 PM
சாலை விபத்தில் இறந்தவர்  வீட்டுக்கு  கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் வருகை

பூச்சோங்  13 செப்டம்பர் ;-  கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் சேவை மையம், பூச்சோங் ஶ்ரீ தெராதாய் குடியிருப்பில்  வாழ்ந்து வந்த ஒருவர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் இறந்து போனதாக அங்கு வசிப்பவரிடமிருந்து  ஒரு அறிவிப்பைப் பெற்றுள்ளது.

மறைந்தவர் ஒரு பாதுகாவலராக  தொழில் புரிந்து வந்துள்ளார், அவருக்கு  தாய், மனைவி மற்றும் ஒன்றரை வயதில் ஒரு குழந்தையை இருக்கிறார்கள். மேலும் அந்த சிறிய குடும்பத்தின் ஜீவனத்துக்காக உழைத்து வந்தவர், இன்று சாலை விபத்தில் இறந்து விட்டதால் அந்த குடும்பம் செய்வதரியாது தவித்து வருவதாக தெரிய வருகிறது.

இன்று திங்கட்கிழமை பிற்பகல், கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் இறந்தவரின் குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு  ஆறுதல் கூறி சிறு உதவிகளையும் மற்றும் குழந்தைக்கான பொருட்களை வழங்கினார்.

அதே நேரத்தில், தனது சேவை மையம் அவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசின் பரிவுமிக்க சமுதாயத்தின் ''மை கிஸ் '' திட்ட உதவிகளை பெற்றுத்தரும் என்றார்.

சிலாங்கூர் மாநில அரசு மக்களுக்கு, பல்வேறு உதவித் திட்டங்களை கொண்டுள்ளது. பொது மக்கள் இது பற்றிய தகவல்களை அறிந்துக் கொண்டு அதற்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.   https://www.selangor.gov.my/index.php/pages/view/2534 மேற்கண்ட இணையதளத்தில் உதவி திட்டங்களை காணலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.