முட்டையின் சில்லறை விலை சீராக உள்ளது- அமைச்சு தகவல்

26 ஆகஸ்ட் 2021, 10:17 AM
முட்டையின் சில்லறை விலை சீராக உள்ளது- அமைச்சு தகவல்

புத்ரா ஜெயா, ஆக 26- நாட்டில் முட்டையின் சில்லறை விலை நிலையாக உள்ளதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவாகர அமைச்சு கூறியுள்ளது.

“ஓப்ஸ் பாசார்“ திட்டத்தின் கீழ் இம்மாதம் 2 ஆம் தேதி முதல் மூன்று ரகங்களைச் சேர்ந்த முட்டைகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதன் சில்லறை விலை சீராக இருப்பது கண்டறியப்பட்டதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

இம்மாதம் 23ஆம் தேதி நிலவரப்படி ஏ கிரேட் முட்டை தலா 44 காசாகவும் பி கிரேட் முட்டை 40 காசாகாவும் சி கிரேட் முட்டை 36 காசாவும் சந்தையில் விற்கப்படுவதாக அது தெரிவித்தது.

கோழி  மற்றும் கோழி முட்டையின் விலை பயனீட்டாளர்களுக்கு சுமையை அளிக்காமலிருப்பதை உறுதி செய்வதற்காக  அந்த உணவுப் பொருள்களின் விலையை அதிகாரிகள் அன்றாடம் கண்காணித்து வருவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்து.

கோழி உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரையும் இந்சோதனை நடவடிக்கை உள்ளடக்கியுள்ளதாகவும் அது கூறியது.

கோழி முட்டையின் சில்லறை விலை கடந்த மாதத்தைக் காட்டிலும் இம்மாதம் அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில் அமைச்சு இந்த விளக்கத்தை அளித்தது.

இந்த “ஓப்ஸ் பாசார்“ நடவடிக்கையின் கீழ் 136 விற்பனை மையங்கள், 41 முட்டை உற்பத்தியாளர்கள், 95 மொத்த வியாபாரிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது.

சந்தையில் 10 முட்டைகளை விட 30 முட்டைகள் அடங்கிய தட்டுகளின் விலை மலிவாக உள்ளது. ஆகவே, பயனீட்டாளர்கள் முட்டைகளை வாங்கும் போது விவேகத்துடன் செயல்படும்படி கேட்டுக்கொள்கிறோம் என அது குறிப்பிட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.