ECONOMY

வயது 12  க்கு  உட்பட்ட குழந்தைகளை இரவு சந்தைக்கு செல்ல அனுமதிக்காது

24 ஆகஸ்ட் 2021, 5:14 AM
வயது 12  க்கு  உட்பட்ட குழந்தைகளை இரவு சந்தைக்கு செல்ல அனுமதிக்காது

ஷா ஆலம், 24 ஆக : ஷா ஆலம் மாநகர மன்றம் (MBSA) தனது நிர்வாகத்தில் உள்ள இரவு சந்தை அல்லது வாரச் சந்தைக்குச் செல்ல , 12 வயதுக்குட் பட்ட குழந்தைகளை அனுமதிக்காது.

கார்ப்பரேட் மற்றும் பொது உறவு இலாக்காவின் தலைவர்  கூறுகையில், இந்த வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு கோவிட் -19 தொற்று நோயை எதிர்கொள்ளும் ஆற்றல் குறைவாக இருப்பதால்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

அப்படி 12வயதிற்குட்பட்ட குழந்தையை யாராவது கொண்டுவந்தால், அந்த பெற்றோர் அறிவுறுத்தப்படுவர், அல்லது ஒருவரை (தாய் அல்லது தந்தை) மட்டுமே உள்ளே நுழையுமாறு  அமலாக்க  அதிகாரிகள் கேட்டுக்கொள்வார்கள்.

"இரவு சந்தை அல்லது வாரச்சந்தைக்கு வருகை தரும் வயது வந்தோர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நடமாட்ட செயல்பாட்டு நடைமுறைகளுக்கு இணங்க செயல் பட வேண்டும்" என்று ஷாரின் அகமது சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இதற்கு மாறாக, செலாயாங் நகராட்சி (MPS), 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் இரவு அல்லது வார சந்தைக்கு அழைத்து வருவதை தடை செய்யவில்லை.இருப்பினும்,  அதன் பொது விவகாரத் துறையின் துணை இயக்குநர் அஹ்மத் ஃபாசி இஷாக்  கூறுகையில், இதுபோன்று குழந்தைகள் வருவதை தங்கள் தரப்பும் ஊக்குவிக்கவில்லை என்றார்.

அதில், பெற்றோர்களே தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அதிகம் சிந்திக்க வேண்டியவர்கள், எது வேண்டும், வேண்டாம்  என்று தீர்மானிக்கும் திறன் அவர்களுக்கு உண்டு என நம்புவதாக கூறினார்."தங்கள் குழந்தைகளை இப்பகுதிக்கு அழைத்து வரும் பெற்றோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,  கொடுக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு தளர்வுகளை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று மட்டுமே பொது மக்களுக்கு தங்கள் தரப்பு   நினைவூட்டுகிறது," என்று அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 19 அன்று, தேசிய நடமாட்ட கட்டுப்பாடு தளர்வு பிரிவின் அறிவிப்பில்  இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்ற தனிநபர்கள் உணவகங்களில் சாப்பிடவும் விளையாட்டு நடவடிக்கைகளில் மற்றும் இரவு சந்தைகள் மற்றும் வார சந்தைகளுக்குச் செல்லவும் வழங்கிய அனுமதி அளிப்பதாக அரசாங்கம் அறிவித்தது.

அரசாங்க வரையறையின்படி, ஒரு நபர் ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா மற்றும் சினோவாக் தடுப்பூசிகளின் இரண்டாவது ஊசி பெற்ற 14 நாட்களுக்குப் பிறகு அல்லது ஜான்சன் & ஜான்சன் மற்றும் காம்சினோவின் 28 நாட்களுக்குப் பிறகு இந்த தளர்வுகளை அனுபவிக்கலாம்.

ஆனால்  அவர்கள் மைசெஜாத்ரா (MySejahtera )பயன்பாட்டில் கோவிட் -19 தடுப்பூசியின் டிஜிட்டல் சான்றிதழ் மூலம் இரண்டு டோஸ் பெற்றதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.