ECONOMY

சிலாங்கூர் மாநில சட்டசபை ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 6 வரை ஒன்பது நாட்களுக்கு கூடும்

19 ஆகஸ்ட் 2021, 7:17 AM
சிலாங்கூர் மாநில சட்டசபை ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 6 வரை ஒன்பது நாட்களுக்கு கூடும்

ஷா ஆலம், ஆக19 - சிலாங்கூர் மாநில சட்டசபை ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 6 வரை ஒன்பது நாட்கள் இங்குள்ள மாநில செயலகத்தின் இணைப்பு கட்டிடத்தில் கூடுகிறது.

சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷரபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்  அவர்கள் ஆகஸ்ட் 23 அன்று 14 வது மாநில சட்டசபையின் முதல் கூட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளார்.

சட்டசபை அமர்வு ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 27 வரைக்கும்; ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 3 வரை; மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

ஜூலை 9 அன்று தெரிவித்ததுபோல்,  இந்த அமர்வு ஒரு சிறப்பு அமர்வல்ல என்றும், கேள்வி, பதில்கள் மற்றும் முழு விவாதங்களை உள்ளடக்கிய வழக்கமான வடிவத்தைப் பின்பற்றுவதாக இருக்குமென மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி, கூறினார்.

கோவிட் -19 தொற்றை தவிர்ப்பதற்காக கண்டிப்பான நடமாட்ட கட்டுப்பாடு ஆணை விதி நடைமுறைகளின்படி அமர்வு நடத்தப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

மீடியா ஊடகவியலாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மற்றும் ஒவ்வொரு நாளும் அமர்வுக்கு முன் கோவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மீடியா சிலாங்கூரின் ஃபேஸ்புக் மற்றும் சிலாங்கூர் டிவி யூடியூப் சேனலில் நேரடியாக அமர்வைப் காணலாம். Selangorkini.my மற்றும் selangorjournal.my வழியாகவும் உடன் செய்தி அறிக்கைகளைப் பின்பற்றலாம் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.