ECONOMY

மூத்த குடிமக்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலை போலீஸ் கைது.

18 ஆகஸ்ட் 2021, 4:54 AM
மூத்த குடிமக்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலை போலீஸ் கைது.

கோலாலம்பூர், ஆக18:  கடந்த சனிக்கிழமை மற்றும் நேற்று பல முக்கிய குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்ட மூன்று பெண்களை கைது செய்ததன் மூலம், ஜிஞ்சாங்கைச் சுற்றியுள்ள மூத்த குடிமக்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலை போலீசார் முறியடித்தனர்.

இந்த ஆண்டு ஜிஞ்சாங்கைச் சுற்றி மூன்று திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதாக, 23 மற்றும் 43 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள், தனியாக வாழும் மூத்த குடிமக்களை இலக்காகக் கொண்டு செயல் படுவதாக சந்தேகிப்பதாக செந்துல் போலீஸ் தலைமை ஏசிபி பெ எங் லாய் கூறினார்.

அந்த  பெண்கள்  பற்பல வேடங்களில், உதவி வழங்க வந்த அரசு சாராத அமைப்பின் (என்ஜிஓ) உறுப்பினர்களாகவும்  மாறுவேடமிட்டு  உதவி ஒப்படைக்கும் போது, சந்தேக நபர்களில் ஒருவர் பாதிக்கப் பட்டவரின் அறைக்குள் திருடுவார் என்றும் கூறினார்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி இங்குள்ள இன்தான் பைதுரி மக்கள் வீட்டுத் திட்டத்தில் அவரது வீட்டில் கொள்ளையடிக்கப் பட்ட RM8,000 தை  இழந்த ஒரு வயதான பெண்ணின் காவல்துறை அறிக்கையைத் தொடர்ந்து அந்தக் குழுவின் உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டனர்.

கடந்த சனிக்கிழமையன்று 23 மற்றும் 43 வயதுடைய இருவர் அடங்கிய முதல் கைது நடவடிக்கையின் போது, ​​ஏழு உணவுப் பொதிகள் மற்றும் நான்கு செல்போன்களையும் போலீசார் கைப்பற்றினர்.  குழுவின் மற்றொரு உறுப்பினர் இன்று கைது செய்யப்பட்டார், "என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் கூறினார்.

அவர்கள் அனைவரும் இப்போது தண்டனைச் சட்டம் பிரிவு 380 இன் கீழ் விசாரணைக்கு உதவ ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளதாக திரு பெ எங் லாய் கூறினார். மற்றொரு நிலவரத்தில், கோம்பக் மாவட்ட போலீஸ் தலைமை ஏசிபி சைய்னால் முகமது  கடந்த சனிக்கிழமை, கோம்பாக், தாமான் கிரீன்வூட்டில் நடந்ததாக  கூறினார்.

அதில் 20 வயதில் ஒரு பெண் சம்பந்தப்பட்ட ஒரு கொள்ளை அறிக்கை மீதான விசாரணையில்,  இந்த சம்பவம் ஒருபோதும் நடக்கவில்லை என்று காவல்துறை கண்டறிந்தது. விசாரணையில் பாதிக்கப்பட்டவர் தன்னை கொள்ளையடித்ததாக ஒரு கதையை புனைந்தார் என்று கண்டறியப்பட்டது.

ஆனால் மேற்படி விசாரணையில் அவர் ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது வலது தொடையில் குத்தியது, "அவர் குடும்ப பிரச்சனையின் காரணமாக உணர்ச்சி வசப்பட்ட துயரத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.  அதற்கான விசாரணை தாள் துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டுள்ளதை தவறான அறிக்கை அளித்த குற்றவியல் சட்டம் பிரிவு 182 ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்படும், ”என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.