ECONOMY

சிலாங்கூரில் உள்ள 2,000 விவசாயிகளுக்கு இலவச இணைய தரவு சலுகை

12 ஆகஸ்ட் 2021, 4:21 AM
சிலாங்கூரில் உள்ள 2,000 விவசாயிகளுக்கு இலவச இணைய தரவு சலுகை

ஷா ஆலம், ஆக 12-   "சிலாங்கூர் இண்டர்நெட் டாத்தா" (டிஸ்) எனும் திட்டத்தின் கீழ் மாநில அரசு 12 மாதங்களுக்கு வழங்கும் இலவச இணைய தரவு சலுகையை பயன்படுத்திக் கொள்ளும்படி விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகுதி உள்ள 2,000 விவசாயிகளுக்கு இந்த இலவச இணைய தரவு சலுகை வழங்கப்படவுள்ளதாக  விவசாயத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார். இத்திட்டத்திற்கு உண்டாகும் செலவினை எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி கழகம் ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாதம் 2,000 வெள்ளிக்கும் குறைவான குடும்ப வருமானத்தை கொண்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உணவு உற்பத்தி துறையில் ஈடுபட்டவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் Tinyuri.com/DISwargaTani   எனும் அகப்பக்கம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த இலவச இணைய தரவு சலுகை திட்டம் தொடர்பில் மேல் விபரங்கள் தேவைப்படுவோர் https://dis.borangmbiselangor.com/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.

பன்னிரண்டு மாதங்களுக்கு இலவச இணைய சேவைக்கான தரவுகளை உள்ளடக்கிய கைப்பேசி சிம் கார்டுகள் மாநிலத்தில் உள்ள 70,000 பேருக்கு வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 4 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.