ஷா ஆலம் ஆக 10;- கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் பல உதவித்திட்டங்களை சிலாங்கூர் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில் அந்த உதவிகளை பெற பொதுமக்கள் இணையம் வழி தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப் படுவதுடன், மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு உதவும் வண்ணம் பல மானிய உதவிகளை வழங்கி வருகிறது.
சில வேளைகளில் மக்களுக்கு உதவ அவர்களும் நேரடியாக அவர்களின் குடியிருப்புகளுக்கு வருகை அளிக்கின்றனர். பூலாவ் கேரியை உள்ளடக்கிய சிஜாங்காங் தொகுதியை பாஸ் கட்சி வெற்றி பெற்றது. அது முதல் ஆபத்து அவசர உதவிகளுக்கு மாநில அரசின் சமூக தலைவர்கள் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கையை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
அங்குள்ள மக்களுக்கு சரியான உதவிகள் வந்து கிடைக்காத ரீதியில் கோல லங்காட் நகராட்சியின் 17 வது பிரிவின் உறுப்பினரான டத்தோ சுந்தர ராஜூ மற்றும் மற்றொரு பன்னீர் (மற்றொரு நகராட்சி உறுப்பினர்) பூலாவ் கேரி கம்பம் சுங்கை குளுவாங்கில் நோயுற்றிருக்கும் 8 குடும்பங்களுக்கு உணவு உதவி பொருட்களை சென்று வழங்கினார்கள்.


