ANTARABANGSA

சைக்கிளோட்டப் போட்டியில் மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

8 ஆகஸ்ட் 2021, 6:48 AM
சைக்கிளோட்டப் போட்டியில் மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

தோக்கியோ, ஆக 8- இங்கு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தளகள சைக்கிளோட்டத்தில் மலேசிய வீரரான டத்தோ முகமது அஜிசல்ஹாஸ்னி அவாங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இங்குள்ள ஷிஸூக்கா தடத்தில் இன்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் களமிறங்கிய 33 வயதான அஜிஸ்ஹாஸ்னி, பிரிட்டனின்  சைக்கிளோட்ட வீரர் ஜேசன் கென்னிக்கு அடுத்த நிலையில் வந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இதன் வழி சைக்கிளோட்டப் போட்டியின் வழி அவர்  நாட்டிற்கு முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தருவார் என்ற நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு நிராசையானது.

இப்போட்டியில் ஹாலந்து வீரர் ஹெர்ரி லாவெர்சன்  மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.