ஷா ஆலம், ஆக 3- சிலாங்கூர் அரசின் பாலஸ்தீன பரிவு மனிதாபிமான திட்டத்திற்கு நிதி திரட்டும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போது தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களிடம் நன்கொடை திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இத்திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளியை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் தற்போது வரை 780,000 வெள்ளி திரட்டப்பட்டுள்ளதாக இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் இத்திட்டத்திற்கு பள்ளிவாசல்களில் தொழுகையின் போது நிதி திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
பத்து லட்சம் வெள்ளி இலக்கை அடைவதற்கு ஏதுவாக மேலும் 250,000 வெள்ளியை திரட்டுவதற்கு ஜாய்ஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகாவின் உதவி நாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ACTIVITIES AND ADS
பாலஸ்தீன நிவாரண நிதிக்கு சுமார் 800,000 வெள்ளி திரண்டது
3 ஆகஸ்ட் 2021, 8:44 AM
தொடர்புடைய செய்திகள்
national
கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் இலவச சட்ட ஆலோசக உதவி
n.pakiya
14 பிப்ரவரி 2024

health
கிள்ளான் மருத்துவமனையில் தீவிபத்து- பாதுகாப்பு அம்சங்கள் மீது விரிவான சோதனை
n.pakiya
23 ஜூலை 2025

activities-and ads
இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சனைக்கு தீர்வு காண -ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு முயற்சி
n.pakiya
15 பிப்ரவரி 2024

activities-and ads
ஏசான் ரஹ்மா விற்பனைக்கு மக்கள் பேராதரவு இசூவான் காசிம் பெருமிதம்
n.pakiya
1 பிப்ரவரி 2024

உங்கள் கருத்து என்ன?




