கோவிட்-19 நோயாளிகளைத் தனிமைப்படுத்த புக்கிட் திங்கியில் மினி பி.கே.ஆர்.சி. மையம்

22 ஜூலை 2021, 6:10 AM
கோவிட்-19 நோயாளிகளைத் தனிமைப்படுத்த புக்கிட் திங்கியில் மினி பி.கே.ஆர்.சி. மையம்

ஷா ஆலம், ஜூலை 22- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்ட கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கி 1 பகுதியில் நோய்த் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக மினி பி.கே.ஆர்.சி. மையம் ஏற்படுத்தப்படும்.

இப்பகுதியில் அமைந்திருக்கும் 50 நோயாளிகளை தங்க வைக்கும் வசதி கொண்ட மண்டபம் ஒன்று தாக்கம் குறைவான கோவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தும் மற்றும் சிகிச்சையளிக்கும் மையமாக பயன்படுத்தப்படும் என்று கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது ஜைனால் முகமது நோர் கூறினார்.

இப்பகுதி மக்களுக்கு கோவிட்-19 பரிசோதனை இன்று தொடங்கி மேற்கொள்ளப்படுவதால் தற்போதைக்கு இம்மையத்தில் நோயாளிகள் யாரும் தங்கவில்லை என்று அவர்  சொன்னார்.

இந்த மையம் ஒன்றாம் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நோய்த் தாக்கம் குறைவாக உள்ளவர்கள் தொலைவிலுள்ள தனிமைப்படுத்தும் மையங்களுக்குச் செல்வதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக 969 வீடுகளை உள்ளடக்கிய 11 புளோக்குகளில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கி இரு வாரங்களுக்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.