ஷா ஆலம், ஜூலை 20- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 12,366 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 10,972 ஆக இருந்தது.
சிலாங்கூரில் கடந்த நான்கு நாட்களாக நான்காயிரம் என்ற அளவில் இருந்து வந்த நோய்த் தொற்று இன்று 5,524 ஆக ஏற்றம் கண்டது.
கோலாலம்பூரில் நேற்று 609 ஆக பதிவான கோவிட்-19 எண்ணிக்கை இன்று 1,580 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
ஜொகூர் (793), சபா (657), சரவா (351), நெகிரி செம்பிலான் (970), பினாங்கு (460), கிளந்தான் (179), கெடா (701), பேராக் (295), மலாக்கா (309), பகாங் (288), திரங்கானு (190), லபுவான் (17), புத்ரா ஜெயா (50), பெர்லிஸ் (2)



