|
ஷா ஆலாம், ஜூலை 19 - மேம்படுத்தப்பட்ட இயக்கக் கட்டுப்பாட்டு ஒழுங்கின் (EMCO) கீழ் வைக்கப்பட்டுள்ள கிள்ளானில் உள்ள பங்சாபுரி பண்டார் புக்கிட் திங்கி 1 இல் குடியிருப்பாளர்களுக்கான கோவிட் -19 சோதனை நடவடிக்கை புதன்கிழமை நடைபெறும்.
998 வீட்டுகளில் 2,875 குடியிருப்பாளர்களின் சுகாதார நிலையை மதிப்பிடுவதற்கு மாவட்ட சுகாதார அலுவலகம் (பி.கே.டி) தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டு வருவதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி மொஹமட் ஜைனல் மொஹட் நோர் தெரிவித்தார். “இப்போதைக்கு, நோய் தொற்று அறிகுறிகள் உள்ள நபர்கள் மீது கவனம் செலுத்தும். இருப்பினும், அறிகுறியற்ற நபர்கள் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க பி.கே.டி ஆபத்து மதிப்பீட்டைச் செய்யும். "அறிகுறிகளைக் காட்டாதவர்களுக்கு, அவர்களுக்கு சனிக்கிழமை தடுப்பூசி போடப்படும்," என்று சிலாங்கூர்கினியைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், குடியிருப்பாளர்களுக்கு வீடு வீடாக மொத்தம் 1,000 உணவு கூடைகள் விநியோகிக்கப்படும். ஜூலை 16 ம் தேதி, துணை பிரதமர் டத்தோக் ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், ஜூலை 18 முதல் இரண்டு வாரங்களுக்கு நான்கு சிலாங்கூர் துணை மாவட்டங்களில், நான்கு இடங்கள் EMCO இன் கீழ் வைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அவை பெட்டாலிங்கின் டாமன்சாராவில் உள்ள டமாய் எப்பார்ட்மெண்ட்; அம்புங்கில் உள்ள ஜாலான் பாண்டன் இண்டா, உ லு லங்காட்; கிள்ளான் ஜலான் பத்து நீலாம், மற்றும் கோம்பாக்கின் பத்துவிலுள்ள தாமான் சமுத்தராவுமாகும்.
|
|
|
ECONOMY
கிள்ளானில் உள்ள பங்சாபுரி பண்டார் புக்கிட் திங்கி மற்றும் நான்கு இடங்கள் EMCO இன் கீழ் வைக்கப்படும்
19 ஜூலை 2021, 6:50 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




